பாஜக தான் ஆட்சிக்கு வரும். நரேந்திர மோடிதான் பிரதமராக வருவார் பாஜக தான் ஆட்சிக்கு வரும். நரேந்திர மோடிதான் பிரதமராக வருவார் என தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். பா.ஜ.க , இளைஞரணி சார்பில் ஏழை இந்துமாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக்கோரி தூத்துக்குடி அண்ணாநகர் மெயின்ரோட்டில் ஜூலை போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது;

டாக்டர் அம்பேத்கர் இந்துமதத்தில் ஒடுக்கப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் சலுகைகிடைக்க செய்தார். காங்கிரஸ் கட்சியோ ஜாதிகளே இல்லாத கிறிஸ்தவ மதத்திலும், முஸ்லீம்மதத்திலும் ஜாதிகளை உருவாக்கி இந்து மாணவர்களுக்கு கிடைத்துவந்த சலுகைகளை பறித்துக்கொண்டனர்.

உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகளை பறித்த காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், நீங்கள் உங்கள் குழந்தை களுக்கும், குடும்பத்திற்கும் துரோகி ஆகிவிடுவீர்கள். இலங்கை தமிழர்களின் உயிரைப்பறித்த காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் நீங்கள் தமிழுக்கும், துரோகி ஆகி விடுவீர்கள். வரும் பாராளுமன்ற தேர்தலில் காசுக்காக காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு வாக்களிக்கபோகிறீர்களா? உங்கள் குழந்தைகள், குடும்பநலனில் அக்கறைகொண்ட பாஜக.,விற்கு வாக்களிக்க போகிறீர்களா? என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள்.

அடுத்து பாஜக.,தான் ஆட்சிக்குவரும். நரேந்திர மோடிதான் பிரதமராவார். இந்து மாணவர்களுக்கு கல்வித் தொகையை அவர் பெற்றுத்தருவார். பயங்கரவாதத்தை காவல்துறை அடக்காவிட்டால், அடுத்துபலியாவது காவல்துறையாகத்தான் இருக்கும் என கூறினார்.

Leave a Reply