நாட்டின் புதியமாநிலமாக தெலுங்கானா உதயமாகிறது நாட்டின் புதியமாநிலமாக தெலுங்கானா உதயமாகிறது. அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலான தெலுங்கானா மக்களின் கோரிக்கையை ஏற்று தனிமாநிலம் அமைப்பதற்கு காங்கிரஸ்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒருமனதாக ஒப்புதல் தெரிவித்துள்ளன.

மேலும் ஹைதராபாத் இரண்டு மாநிலங்களுக்கும் 10 ஆண்டு காலத்துக்கு பொது தலைநகராக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவைப் பிரித்து 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நீண்டகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. டெல்லியில் ஐ.மு.,கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார், ராஷ்டிரியலோக் தளத் தலைவர் அஜீத்சிங் ஆகியோர் இப்புதியமாநில உருவாக்கத்துக்கு ஆதரவுதெரிவித்தனர்.

Leave a Reply