பெட்ரோல், டீசல்விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது நள்ளிரவுமுதல் அமலுக்குவந்தது. பெட்ரோல் விலை மீண்டும் லிட்டருக்கு 70 காசுகளும், டீசல்விலை 50 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. அதற்குள் மீண்டும் உயர்த்தபட்டுள்ளது.

இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும். இது ஏழை, எளியமக்களை வெகுவாக பாதிக்கும் என பலர் கவலைதெரிவித்தனர். எண்ணெய்கம்பெனிகள் தங்கள் இஷ்டம் போல் விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அவை பெட்ரோல். டீசல்விலையை உயர்த்திவருகின்றன.

கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல் டீசல்விலையை உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறிவருகின்றன.

பெட்ரோல், டீசல் ஆகியவை அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல்விலை உயர்ந்துள்ளதால் பலரும் கவலை அடைந்துள்ளனர். ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒருகாரணத்தைக் கூறி எண்ணெய் கம்பெனிகள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திவருகின்றன.

Leave a Reply