செப்டம்பர் மாதத்திற்குள்ளாக பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்படலாம்  இந்த வருட இறுதியில் நடக்கவுள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களுக்கு முன்னதாக பாஜக . பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.க தேர்தல் பிரசாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையில் பாராளுமன்ற கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்குசென்று தனது பிரசாரத்தினை தொடங்யுள்ளார் மோடி.

இந்நிலையில் இந்தாண்டிற்குள் 4 மாநில சட்ட சபை தேர்தல்கள் நடக்க உள்ளன. அதற்குமுன்னதாக அதாவது செப்டம்பர் மாதத்திற்குள்ளாக, பாஜக.,வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட உள்ளார். அதன்பின்னர் 6 மாதங்கள் மோடி தலைமையில் பாஜக . தனது தேர்தல் பிரசாரத்தினை நாடுமுழுவதும் முடுக்கிவிட உள்ளது.

Leave a Reply