எட்டப்பர்கள் இன்றும் நம்முடனே வாழ்கிறார்கள் ஆட்சி அதிகாரத்திற்காகவும் , சுய லாப நோக்கத்திற்காகவும் நாட்டையும் , நாடாளும் அரசனையும் அந்நியனிடம் காட்டிக்கொடுத்த எட்டப்பர்கள் வரலாற்றில் மட்டும் அல்ல, நிகழ் காலத்திலும் இன்றும் நம்முடனே வாழ்கிறார்கள். அன்றைய முடியாட்சி காலத்து எட்டப்பர்கள் அந்நியனிடம்

மன்னனை காட்டிக்கொடுத்தார்கள் என்றால் , இன்றைய ஜனநாயக ஆட்சி காலத்து எட்டப்பர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தன் நாட்டு மக்கள் பிரதிநிதியை பற்றி அந்நியனிடம் கையெழுத்து போட்டுக்கொடுத்து ஆதார பூர்வமாக விட்டுக் கொடுத்திருக்கிறார்கள் .

காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திமுக, விடுதலை சிறுத்தைகள் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 12 கட்சிகளைச் சேர்ந்த 65 இந்திய எம்.பி.க்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மோடிக்கு விசா தரக்கூடாது என கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர் . இதில் 25 ராஜ்யசபா எம்.பி.க்களும் 40 லோக்சபா எம்.பிக்களும் கையெழுத்திட்டுள்ளனர். இதேபோன்ற ஒரு கடிதம் சென்ற ஆண்டு நவம்பர் 26, டிசம்பர் 5-ந் தேதியன்றும் ஒபாமாவுக்கு இதே 65 எம்.பிக்களால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில், மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்ற அமெரிக்காவின் முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அந்த கொள்கையை தொடர்ந்தும் அமெரிக்கா கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இதை இந்தியாவில் முன்னின்று ஒருங்கிணைத்தவர் சுயேட்சை ராஜ்யசபா எம்.பியான முகமது ஆதீப், அமெரிக்காவில் வழிமொழிந்தவர் இனப் படுகொலைக்கு எதிரான அமைப்பின் நிறுவனரான இந்தியர் ஷேக் உபைத் அதாவது பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன், ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் அத்துமீறி உள்ளே நுழைந்து நியாயத்தை நிலைநாட்டுகிறேன் என்ற போர்வையில் பலாயிரகணக்கான அப்பாவி இஸ்லாமியர்களை பரலோகம் அனுப்பிய அமெரிக்காவிடம் மண்டியிட்டுள்ளனர்.

முகமது பின் காசிம் வெற்றி பெற லஞ்சம் வாங்கிகொண்டு போரிடாமல் இருந்த தாஹிர் அரசனின் அதிகாரிகளுக்கும், முகமது கோரி வெற்றிப்பெற மன்னன் ப்ருத்விராஜனுக்கு துரோகம் செய்த ஜெயசந்திரனுக்கும் , இந்த 65 ந்து எம்.பி.,க்களுக்கும் அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை அந்நியன் யார் வேண்டுமானாலும் நாட்டை ஆண்டுவிட்டு செல்லட்டும் ஆனால் நரேந்திர மோடி ஆண்டுவிடக் கூடாது என்ற  படபடப்பைத்தான் இவர்களது கையெழுத்தில் காணமுடிகிறது.

எங்கே நரேந்திர மோடி வந்து விட்டால் 2ஜி.,யில் சுதந்திரமாக சுற்றித்திரியும் தமது வாரிசுகள் உள்ளே போகவேண்டி வருமோ, டெல்லி மருத்துவர்கள் குழு சென்னை வந்தது போக சென்னை மருத்துவர் குழு திகார் செல்ல வேண்டி வருமோ என்ற படபடப்பு 2ஜி ஊழல் புகழ் கட்சியின் கையெழுத்தில் தெரிகிறது, ஓட்டுக்காக ஜாதி , நோட்டுக்காக இந்து மத எதிர்ப்பு என்ற பிழைப்பில் மண்விழுந்து விடும் என்ற சிறுத்தைகளின் சீரல் கையெழுத்தில் தெரிகிறது. டன் டன்னாக தரம் குறைந்த குப்பைகளை இறக்கி கோடி கோடியாக இந்திய பொருளாதரத்தை கொள்ளையடிக்கும் சீனாவின் பொருளாதரத்தில் ஏதேனும் சருக்கல் வந்துவிடுமோ என்ற சீன பாசம்தான் கம்யூனிஸ்ட்களின் கையெழுத்தில் தெரிகிறது.

தாங்கள் நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்தும், தாங்கள் நினைத்ததை எல்லாம் செயல்படுத்தும் மன்மோகன் சோனியா கூட்டணி போய் நரேந்திர மோடி வந்துவிட்டால் தங்கள் பிழைப்பு நாய் பிழைப்பே! அணுகுண்டு சோதனை செய்துவிட்டு முடிந்தால் பார்த்துக்கொள் என்று சவால் விட்ட வாஜ்பாய் தலைமையிலான வீர இந்தியா எங்கே! , அணு சக்த்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு ஆதாயமாக கையெழுத்து போட்டுக்கொடுத்து விட்டு கூனி குறுகி நிற்க்கும் மன்மோகன் சிங் தலைமையிலான கோழை இந்தியா எங்கே!. மீண்டும் ஒரு வாஜ்பாய்யா!!! அய்யோ வேண்டவே வேண்டாம் என்ற பயம்தான் அமெரிக்காவின் விஷா மறுப்பில் தெரிகிறது.

ஆகமொத்தத்தில் நரேந்திர மோடி பிரதமராக வந்து விடுவரோ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பயப்படுகிறார்கள். பாரத மக்களோ காங்கிரஸ் வந்து விடக்கூடாது என்று ஒரே விதமாக பயப்படுகிறார்கள். பாரதபிரதமரை அமெரிக்காவின் விஷா தேர்ந்தெடுக்க போவதில்லை, இந்த 65ந்து எட்டப்பர்களின் கையெழுத்தும் தேர்ந்தெடுக்க போவதில்லை. மக்களின் ஏகோபித்த வாக்கு மட்டுமே தேர்ந்தெடுக்க போகிறது, அது நரேந்திர மோடியாக மட்டுமே இருக்க போகிறது .

நன்றி தமிழ்தாமரை V.M.,வெங்கடேஷ்

Leave a Reply