எங்கள் கட்சியின் பிரதமர்வேட்பாளர்  வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான் இமாசலபிரதேசத்தில் பா.ஜ.க தொண்டர்கள் பயிற்சிமுகாமை தொடங்கிவைக்க அகில இந்திய பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் வெள்ளிக்கிழமை வந்தார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

எங்கள் கட்சியின் பிரதமர்வேட்பாளராக தேர்வு செய்யப்பட உள்ளவர் யார் என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான் . இனி காங்கிரஸ் கட்சி தான் தனது பிரதமர்வேட்பாளரை அறிவிக்கவேண்டும்.

அரசியல்வாதிகள் மீதான நம்பகத் தன்மை குறைந்து விட்டதற்கு காரணம், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசியல்கட்சிகள் நிறைவேற்றாததுதான்.

ஐ.மு.,கூட்டணியில் பலவீனமான மற்றும் தகுதியில்லாத தலைமை உள்ளதால், நாடு மிகவும்மோசமான நெருக்கடியை கடந்து கொண்டிருக்கிறது. சீன ராணுவ வீரர்கள் எல்லையில் அடிக்கடி ஊடுருவுகின்றனர். சிறியநாடுகள் கூட நம்மை சீண்டிப்பார்க்க நினைக்கின்றன என்றார்.

Leave a Reply