மேட்டுரிலிருந்து முன்கூட்டியே கூடுதலாக நீர் திறந்துவிட வேண்டும் 2005-ல் ஏற்பட்ட வெள்ள சேதத்தை போன்ற ஒரு தவறு மீண்டும் நிகழக்கூடாது. மேட்டுரிலிருந்து முன்கூட்டியே கூடுதலாக நீர் திறந்துவிட வேண்டும் என்று பாஜக தேசிய கவுன்சில் உறுப்பினரும், காவிரிடெல்டா பாசன விவசாயிகள் பாதுகாப்புசங்க மாநில துணை தலைவருமான கே.வி.கண்ணன் பிள்ளை தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

மேட்டூர் அணைநீர்மட்டம் இன்னும் இரண்டு தினங்களில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி விடும். நீர்வரத்து 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக உள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. வழக்கம்போல கர்நாடகம் தன்னுடைய அணைகளை முழு கொள்ளவு வைத்துக்கொண்டு நீர்வரத்தை அப்படியே மேட்டூருக்கு திருப்பிவிடுகின்றன. சென்ற 2005-ம் ஆண்டு இதேபோல் கர்நாடகம் அணைகளை நிரப்பிக்கொண்டு எந்தவித முன்னறிவிப்பின்றி சுமார் 3 லட்சம் கன அடி நீரை மேட்டூரிக்கு திருப்பி விட்டன. அன்று இருந்த தமிழக அரசு மேட்டூர் அணையை 120 அடிக்கு வைத்திருந்ததால், வேறு வழியின்றி அப்படியே நீர்வரத்து 3 லட்சம் கன அடியை காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறந்து விட்டது.

கல்லணையில் இருந்து 48வது மயிலில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் வலதுகரையில் தஞ்சை மாவட்டத்தின் பாபநாசம் அருகே வாழ்க்கை என்ற இடத்தில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் திருச்சி, தஞ்சை, கடலூர்,மாவட்டங்கள் கடும்வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது. எனவே 2005 ஆண்டு நடைபெற்ற தவறு மீண்டும்ஏற்படாமல் இருக்க தமிழக அரசு முன்னேற்பாடாக மேட்டூருக்குவரும் நீர்வரத்தினை பாதி நீரை கல்லணைக்கு அனுப்பவேண்டும். கல்லணையிலிருந்து வறண்டுகிடக்கும் காவிரி டெல்டா பகுதிகளுக்கு நீர் திறந்துவிட்டு ஏரிகள் மற்றும் குளங்களை நிரப்பிக்கொள்ளலாம். கொள்ளிடம் மற்றும் காவிரியில் திடீர்வெள்ளம் ஏற்படுவதை தடுக்கலாம் என கே.வி.கண்ணன்பிள்ளை தெரிவித்தார்.

Leave a Reply