பிரதமர்வேட்பாளர் தொடர்பாக பா.ஜ.க.,வில் கருத்துவேறுபாடு இல்லை பிரதமர்வேட்பாளர் தொடர்பாக பா.ஜ.க.,வில் கருத்துவேறுபாடு இல்லை என பாஜக மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு தெரிவித்துள்ளார்

பெங்களூரில் செய்தியாளர்களிடம் மேலும் இது குறித்து அவர் கூறியதாவது:

பிரதமர்வேட்பாளர் தொடர்பாக பா.ஜ.க.,வில் கருத்துவேறுபாடு நிலவுவதாக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல் உண்மையில்லை. பாஜகவை சேர்ந்த சிலர் எல்கே.அத்வானியையும், மேலும் சிலர் நரேந்திர மோடியையும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருப்பது அவரவர் சொந்த கருத்தாகும்.

கட்சியின் நாடாளுமன்ற குழு கூடி, பிரதமர்வேட்பாளரை தகுந்தநேரத்தில் அடையாளம் கண்டு அறிவிக்கும்.கட்சியின் பிரசாரக் குழு தலைவராக நரேந்திர மோடியை நியமனம்செய்தது காங்கிரஸ் கட்சியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் பா.ஜ.க மற்றும் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ்கட்சி பொய்பிரசாரம் செய்து வருகிறது. இது காங்கிரஸ்க்கு எதிராக திரும்பும் என்பதை மறக்கக் கூடாது என்றார் .

Leave a Reply