நாட்டின் ஊழலுக்கு காரணமே அரசியல் வாதிகளின் அகங்காரம் தான் என பா.ஜ.க மூத்த தலைவர் எல ,கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிந்திமொழியில் பேசிய அத்வானி, தனிப்பட்ட மனிதரின் இறைத்தன்மையை அதிகரிக்க செய்து விட்டால், நாட்டில் ஊழலை குறைத்துவிடலாம். தற்போதைய சமூகத்துக்கு அந்த இறைத் தன்மை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் . நாட்டின் மிகமுக்கிய பிரச்னையே ஊழல் தான். இந்த ஊழலுக்குக் காரணமே அரசியல் வாதிகளுக்கு உள்ள அகங்காரம் தான். அதாவது, மிகவும் சக்தி வாய்ந்தவர்கள், சுதந்திரமானவர்கள் என்ற அகங்காரமே அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்யவைக்கிறது என்றார்.

Leave a Reply