நாட்டில் இனி எந்த ஆற்றிலும் மணல்அள்ள பசுமைதீர்ப்பாயம் திடீர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் பசுமைதீர்ப்பாயத்தின் அனுமதியின்றி எந்த ஆற்றிலும் மணல் அள்ளக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

உ.பி.,யில் மணல் மாஃபியாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த ஐஏஎஸ். அதிகாரி துர்காசக்தி நாக்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவிவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தேசியபசுமை தீர்ப்பாயம் இந்த அதிரடிஉத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடுமுழுவதும் ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தேசிய பசுமைதீர்ப்பாயம் புதியகட்டுப்பாடு விதித்துள்ளது. இதுகுறித்து தேசிய பசுமைதீர்ப்பாயம், அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்தநோட்டீசில், பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதியின்றி நாட்டில் எந்த ஆற்றிலும் மணல் அள்ளக் கூடாது என புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் சட்ட விரோதமாக மணல் அள்ளுவது தேசியமுக்கியத்துவம் வாய்ந்தபிரச்சினை என கருத்துதெரிவித்துள்ள பசுமை தீர்ப்பாயம், மணல் அள்ளும் விவகாரம்குறித்து வரும் 14-ம் தேதிக்குள் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply