உ.பி., மாநிலம் அலாகாபாதில் உள்ள நைனிக்கு திங்கள் கிழமை வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு பாஜக-வின் இளைஞர் அணியினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்புதெரிவித்தனர்.

நைனியில் தனது கொள்ளுப்பாட்டியும், ஜவாஹர்லால் நேருவின் மனைவியுமான கமலாநேருவின் பெயரில் புதிய மருத்துவமனையை ராகுல்காந்தி தொடக்கிவைத்தார்.

மருத்துவ மனைக்கு ராகுல்காந்தி வரும் வழியில் பா.ஜ.க-வின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவை சேர்ந்தவர்கள் அவருக்கு கருப்புக்கொடி காட்டினர். அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்குஎதிரான கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

Leave a Reply