மத்திய அரசு இன்னும் விழித்துக்கொள்ளாமல் இருப்பது ஏன் ஜம்முகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலில் 5 இந்தியவீரர்கள் உயிரிழந்த நிலையில் மத்திய அரசு இன்னும் விழித்துக்கொள்ளாமல் இருப்பது ஏன் என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச்பகுதியில் இன்று அதிகாலை 15 பேர்கொண்ட பாகிஸ்தான் ராணுவக்குழு திடீரென இந்திய நிலைகளின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 5 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர். நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதல் தொடர்பாக ட்விட்டரில் கருத்துதெரிவித்துள்ள மோடி, சீனா ஒருபக்கம் ஊடுருவுகிறது.. பாகிஸ்தான் மற்றொரு பக்கம் தாக்குதல் நடத்துகிறது. இந்திய எல்லைகளை பாதுகாப்பதில் மத்தியஅரசு மெத்தனமான போக்கை கடைபிடிக்கிறது .

பூஞ்ச்பகுதியில் பாகிஸ்தானின் காட்டுமிராண்டி தனமான தாக்குதலில் உயிரிழந்த வீரமிக்க ராணுவவீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Leave a Reply