மசூதி சுவரை இடித்தது துர்காசக்தி அல்ல நொய்டாவில் மசூதிசுவரை இடித்தது இடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்காசக்தி அல்ல.. உள்ளூர் மணல் மாஃபியாக்கள் தான் சுவரைஇடித்தனர் என அம்மாநில வக்புவாரிய உறுப்பினர் காதிர்கான் ஜயஸ்வால் தெரிவித்துள்ளார்.

மசூதிசுவரை இடிக்க உத்தரவிட்டு சமூகநல்லிணக்கத்தை சீர்குலைக்க பார்த்தார் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்காசக்தி. இதனால் அவர் சஸ்பென்ட் செய்யப்படுகிறார் என உ,பி,. அரசு அறிவித்தது. இந்தவிவகாரம் நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி அரசோ தமதுநிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த வக்புவாரிய உறுப்பினர் காதிர்கான், மசூதியின் சுவரை இடிக்க உத்தரவிட்டது துர்காசக்தி அல்ல. அவர் சம்பவ இடத்திலிருந்து கிளம்பிச்சென்ற பின்னர் உள்ளூர் மணல் மாஃபியா கும்பல்தான் அந்தசுவரை இடித்தது என்றார்.

Tags:

Leave a Reply