காங்கிரஸ் பாகிஸ்தான் பக்கமா  இந்தியா பக்கமா  காங்கிரஸ்கட்சி பாகிஸ்தான் பக்கம் உள்ளதா அல்லது இந்தியான் பக்கம் உள்ளதா என பா.ஜ.க மூத்த தலைவர் யஷ்வந்த்சின்கா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய எல்லையில், ராணுவவீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டவிவகாரம் நாடாளுமன்ற அவைகளில் எதிரொலித்தது.

இந்நிலையில், மக்களவையில் பேசிய யஷ்வந்த்சின்கா, இந்திய ராணுவவீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பொறுப்போடு மத்திய அரசு நடந்துகொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சி பாகிஸ்தான் பக்கமா அல்லது இந்தியா பக்கமா என்பதை உடனடியாக தெளிவுபடுத்தவேண்டும் என மக்களவையில் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஜனவரி முதல் இந்தியா மீது பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. நமது ராணுவம், நாடாளுமன்றம் பலம்வாய்ந்ததாக இருக்கிறது. எனவே, அவர்களுக்கு அந்த வழியிலேயே நாம் பதிலடி கொடுக்கவேண்டும் என்று கூறினார்.

Leave a Reply