குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வர இருக்கும் பாராளுமன்றதேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

முதல்கூட்டமாக வருகிற 11–ந்தேதி ஐதராபாத் வருகிறார். பாஜக ஏற்பாடுசெய்துள்ள பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

அவரதுபேச்சை திரையரங்குகளில் நேரடியாக ஒளிபரப்புசெய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.

இதற்காக பலதிரையரங்குகளை வாடகைக்கு எடுத்து பொதுமக்கள் இலவசமாக பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நரேந்திரமோடி ஐதராபாத் வரக்கூடாது என்றும் அவர் வந்தால் மதக்கலவரம் விடும் என்றும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் ஹைதராபாத்துக்கு மோடி வருவதைத் தடை செய்யமுடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

அது சரி ஐதராபாத் என்ன பாகிஷ்தானிலா இருக்கு

Leave a Reply