ஆடிட்டர் ரமேஷை கொலை செய்த கொலையாளிகள் நாகர் கோவிலில் பதுங்கியிருப்பதாக தனக்கு கடிதம்மூலம் தகவல் கிடைத்துள்ளதாக மாநில பா.ஜ.க தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அவர் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆட்டர் ரமேஷை படுகொலைசெய்த கொலையாளிகள் நாகர் கோவிலில் பதுங்கி இருப்பதாக தனக்கு கடிதம்வந்துள்ளதாக கூறினார். அவரது இந்தத்தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினரும் இது குறித்து உடனடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர். உண்மையில் கொலையாளிகள் பதுங்கியுள்ளனரா என்பதை அறிய தேடுதல்வேட்டையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. காவல் துறையினரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply