ஒபாமாவின், பாணியை மன்மோகன்சிங் பின்பற்றவேண்டும் ஐ.நா.,சபையின் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் மன்மோகன்சிங், நியூயார்க் செல்லும்போது, அங்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீபுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது. இந்த விவகாரத்தில் , அமெரிக்க அதிபர் ஒபாமாவின், பாணியை பின்பற்றவேண்டும்’ என்று , பாஜக யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து , டில்லியில் நிருபர்களிடம் பேசிய, பா.ஜ.க, மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி கூறியதாவது:அண்டைநாடான பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை என்பதற்கு, போதுமானகாரணங்கள் உள்ளன. அமெரிக்காவால் தேடப்படும் நபர்களுக்கு, அடைக்கலம் தந்ததற்காக , ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் உடனான சந்திப்பையே ரத்துசெய்தார், அமெரிக்க அதிபர் ஒபாமா. அதேபோன்ற பாணியை, பிரதமர் மன்மோகன்சிங்கும் பின்பற்றவேண்டும். ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க, நியூயார்க் செல்லும்போது, அங்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுடன், பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அளித்த வாக்குறுதிகளை, பாக்., காப்பாற்றவேண்டும். அதுவரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை கூடாது. என்று முரளி மனோகர் ஜோஷி கூறினார்.

Leave a Reply