முத்துப்பேட்டையில், பாஜக மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் பிறந்த நாளை முன்னிட்டு, ரத்த தானம் முகாம் உள்ளிட்ட நிகழ்சிகளை சீர்குலைக்க முயன்றவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர் . இது அங்கு பதற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவுகுட்பட்ட முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடையைச்சேர்ந்தவர் கருப்பு (எ) முருகானந்தம் இவர், பாஜக மாநில செயலாளராக உள்ளார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, முத்துப்பேட்டையில் நேற்று இரத்ததான முகாம் உள்ளிட்ட நிகழ்சிகள் நடைபெற்றன , பா.ஜ.க., தொண்டர்கள், 100க்கும் மேற்பட்ட டூவீலர்களில் ஊர்வலமாகசென்று, முருகானந்தத்துக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து,

இந்நிலையில்,ஆசாத் நகரை சேர்ந்தவர்கள், 30க்கும் மேற்பட்ட டூவீலர்களில் ரத்ததானம் நடக்கும் பகுதிக்கு, ஊர்வலமாக செண்டு அமைதியை சீர்குலைக்க முயன்றனர். போலீஸார், அனுமதி இன்றி திடீர் என ஊர்வலமாக சென்றவர்களை தடுத்தனர் . போலீஸாருக்கும், ஊர்வலமாக சென்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நிலைமையை சமாளிக்க போலீஸார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து, ஊர்வலத்தில் வந்தவர்கள் கல் வீசி தாக்கினர். இதில், நான்கு கடைகள் சேதமடைந்தது. ஒருபோலீஸ் வேன்கண்ணாடி நொறுக்கப்பட்டது.

தகவலறிந்த திருவாரூர் எஸ்பி., மகேஷ் குமார் காளி ராஜ் தலைமையில், டிஎஸ்பி.,கள் முத்துப்பேட்டை பாஸ்கரன், திருத்துறைப் பூண்டி அப்பாசாமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குசென்று, விசாரணை மேற்கொண்டனர்.அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க, போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

Leave a Reply