லோக்சபாதேர்தலை எதிர்கொள்ளும் விதமாக ஆந்திரமாநிலம் ஹைதராபாத்தில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உரையாற்ற்றுகிறார் . லோக்சபாதேர்தலை நரேந்திரமோடி தலைமையில் பாஜக எதிர்கொள்கிறது. அவர் நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டும் வருகிறார்.

ஆந்திராவின் ஹைதராபாத்தில் ‘புதியபாரதத்தின் இளைஞர்கள் முழக்கம்’ என்ற தலைப்பில் பிரசாரகூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது பாஜக . இந்த பொதுக் கூட்டத்துக்கு வருபவர்களிடம் ரூ5 நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மோடியை வரவேற்கும் விதமாக பிரமாண்ட பேனர்கள், சுவரொட்டிகள் நகரம்முழுவதும் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.

மழைபெய்தாலும் பொதுக்கூட்டம் பாதிக்கப்படக் கூடாது என்றபதற்காக கூட்டத்தில் வருபவர்களுக்கு இலவச குடை வழங்கப்படுகிறது. இதற்காக மோடியின் படம் பொறித்த 50 ஆயிரம் குடைகள் ஐதராபாத் வர வழைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply