ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு, ஐதராபாத்தை, பொதுவான தலை நகரமாக்கும் முடிவு ஏற்கத்தக்கதல்ல. மதக்கலவர பதற்றம் நிறைந்த ஐதராபாத்தில், சட்டம் – ஒழுங்கு பாதுகாப்புக்கு, உரிய உத்தரவாதம் தர வேண்டும்’ என ஆர்கனைசர் கருத்து தெரிவித்துள்ளது.

ஆந்திராவைப் பிரித்து, தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆர்கனைசர்’ இதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:தெலுங்கானாவை, தன் அரசியல்லாபத்திற்கு சாதகமாக, காங்கிரஸ் பயன்படுத்தி உள்ளது. தெளிவற்ற வகையில், இந்தவிஷயத்தை, அக்கட்சி அணுகியுள்ளது. தெலுங்கானாவுக்கும், ஆந்திராவுக்கும், பொது தலைநகராக, ஐதராபாத் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது சரியல்ல.

எப்போதும், மதக்கலவர பதற்றமும், பீதியும்கொண்ட நகரம், ஐதராபாத். அங்கு சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட, உறுதியாக செயலாற்றவேண்டும். அதற்கான உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும்.ஆந்திரா, தெலுங்கானா என்று , இருமாநில அரசுகளின் நிர்வாகங்களும், ஒரேநகரத்தில் செயல்பட்டால், சட்டம் – ஒழுங்கை சரிவர நிர்வகிக்கமுடியுமா என்பது சந்தேகமே. எனவே, ஐதராபாத்தை, பொது தலை நகரமாக்கும் முடிவை, மாற்றவேண்டும்.

ஆண்டு நடக்கும் பொதுத்தேர்தலில், ஏற்படப்போகும் சரிவை தடுத்து நிறுத்தவே, காங்கிரஸ் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது. தவிர, அதிகரித்துவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் செல்வாக்கை, வலுவிழக்கச்செய்யவும், தெலுங்கானாவுக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறுகிய அரசியல் லாபங்களுக்காக, தேர்தலை மனதில்கொண்டு, மாநில பிரிவினை முடிவை, காங்கிரஸ் எடுத்துள்ளது.வாஜ்பாய் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது, உத்தரகண்ட், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் என்ற மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. முறையானவகையில், யாருக்கும் எந்தபாதிப்பும் வராமல், அனைத்து தரப்பினரின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்போடு, ஒருமனதாக அந்த மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

அதேபோன்ற அணுகு முறையை, தெலுங்கானா விஷயத்தில், காங்கிரஸ் கடைபிடிக்கவில்லை. அதனால்தான், கூர்க்காலாந்து, போடோலாந்து என்று , நாடுமுழுவதும், தனிமாநில பிரிவினை குரல்கள் கேட்க ஆரம்பித்துள்ளன என்று ஆர்கனைசர் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply