கலவர பகுதியை பார்வையிட சென்ற அருண்ஜெட்லி கைது காஷ்மீரில் கிஸ்த்வாரில் இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. அங்கு இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.

கலவரம் ஏற்பட்ட கிஸ்த்வாரில் தற்போதைய நிலை குறித்து ஆய்வுசெய்ய அருண்ஜெட்லி தலைமையிலான பா.ஜ.க குழு பார்வையிட திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் ஜம்முகாஷ்மீரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கிஸ்த்வார் செல்ல அருண்ஜெட்லி தலைமையிலான பாஜகவினருக்கு தடை விதிக்கப்பட்டது. ஜம்மு விமான நிலையத்திலேயே அருண்ஜெட்லி தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதற்கு குஜராத்முதல்வர் நரேந்திர மோடி, கண்டனம் தெரிவித்துள்ளார் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பாஜக . எம்.பி. அருண் ஜெட்லியை அனுமதிக்காமல், விமானநிலையத்தில் வைத்தே கைதுசெய்தது ஜனநாயக மரபுக்கு விரோதமானது என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply