ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி, தனது கட்சியை கலைத்துவிட்டு பா.ஜ.க.,வில் இணைந்தார். பா.ஜ.க., தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்துபேசிய பின்னர் பா.ஜ.க.,வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இது குறித்து பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் கூறியதாவது:-

ஜன சங்கம் காலம் தொட்டே சுப்பிரமணிய சாமி அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்துவருகிறார். ஜனதா கட்சியின் தேசிய தலைவராகவும் அவர் தற்போது உள்ளார். ஜனதா கட்சியை பாஜக.வுடன் இணைப்பது என்று அவர் முடிவுசெய்துள்ளார்.

இன்று அவரதுமுடிவினை ஏற்று ஜனதா கட்சியை பாஜக.வுடன் இணைப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். சுப்பிரமணிய சாமியின் வருகை பாஜக.விற்கு ஆதாயமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அவரை பாஜக.விற்கு நான் வரவேற்கிறேன் என்று கூறினார்.

ஜனதா கட்சியை பாஜக.வுடன் இணைத்தது குறித்து சுப்பிரமணியசாமி கூறியதாவது:-

கஷ்டமான காலகட்டத்தை நோக்கி நாடு தற்போது பயணித்து கொண்டுள்ளது. தேசிய மற்றும் தேசியவாத நோக்கங்களுக்காக ஒன்றிணைந்து செயலாற்றவேண்டிய நேரம் இது.

எனதுகட்சியினருடன் இணைந்து பாஜக.வுடன் ஒன்றிணைந்து உழைத்து எதிர்வரும் மாதங்களில் இந்தியாவுக்கான புதிய எதிர் காலத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

Leave a Reply