இளைஞர்கள் எல்லாம் மோடிமோடி என்றே முழங்குகிறார்கள் நரேந்திர மோடிதான் நாட்டை வழி நடத்தவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். இளைஞர்கள் எல்லாம் மோடிமோடி என்றே முழங்குகிறார்கள் என்று பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையாநாயுடு பேசியனார் .

ஹைதராபாத்தில் நேற்று நடந்த பா.ஜ.க லோக்சபா தேர்தலுக்கான முதல் பிரசாரக்கூட்டத்தில் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது; காங்கிரஸ் கட்சி பல பிரச்சினைகளில் மக்களைப்பிரிக்கும் வகையில் செயல்படுகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆந்திர மாநிலத்தை தனது சுய நலனுக்காக மூன்று பகுதிகளாகப் பிரித்துவி்ட்டது காங்கிரஸ். நாட்டின் எந்த மூலைக்குப்போனாலும், அங்கு காங்கிரஸ் ஆட்சி அகலவேண்டும் என்ற பேச்சுதான் நிலவுகிறது. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும், மோடி நாட்டை வழிநடத்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரேகட்சி பா.ஜ.க மட்டுமே. மோடி ஒரு 3டி.. பன்முகம், முடிவில் உறுதி, வளர்ச்சி ஆகியவையே அவை. சி.பி.ஐ இப்போது காங்கிரஸ் பீரோ ஆப்இன்வெஸ்டிகேஷன் ஆகிவிட்டது. மோடிக்கு எந்த அளவுக்கு நெருக்கடி தரமுடியுமோ அதை அவர்கள் செய்துபார்த்து விட்டனர்.

பா.ஜ.க.,வின் கொள்கைகள் – முதலில் நாடு, பிறகுகட்சி, சுயநலம் கடைசி தான். ஆனால் காங்கிரஸின் கொள்கைகள் – முதலில் சுய நலம், பிறகு கட்சி, கடைசியாகத் தான் நாடு. இளைஞர்கள் எல்லாம் மோடிமோடி என்றே முழங்குகிறார்கள்.. காங்கிரஸும்கூட மோடி மோடி என்றுதான் பேசிவருகிறது. ஐக்கிய கூட்டணியில் ஒற்றுமை இல்லை.. தேசிய கூட்டணியில் இலக்கு இல்லை.. மூன்றாவது அணி ஒரு மூன்றாம்தர அணியாக உள்ளது என்றார் அவர்.

Leave a Reply