அந்தோணி  நாட்டின் கவுரவத்துக்கு  இழப்பை ஏற்ப்படுத்தியுள்ளார் எல்லைபகுதியில், இந்திய வீரர்கள் ஐந்துபேர், கொல்லப்பட்ட விவகாரத்தில், ராணுவ அமைச்சர் அந்தோணி, முன்னுக்குபின் முரணாக அறிக்கை விட்டு , நாட்டின் கவுரவத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்ப்படுத்தியுள்ளார் என்று பா.ஜ.க, மூத்த தலைவர், அத்வானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ; சமீபத்தில், இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த பாக்., ராணுவத்தினர், இந்திய ராணுவ வீரர்கள்மீது, போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, தாக்குதல் நடத்தினர். இதில், ஐந்து இந்தியவீரர்கள், வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து, பார்லிமென்டில் அறிக்கை தாக்கல்செய்த, ராணுவ அமைச்சர் அந்தோணி, முதலில், பாகிஷ்தான் ராணுவத்துக்கு ஆதரவாகபேசினார். பாக்., ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகளே, தாக்குதல்நடத்தியதாக, முதலில் கூறினார். தெலுங்கானா அனைத்து தரப்பினரும் எதிர்ப்புதெரிவித்ததை அடுத்து, அதன் பின், அறிக்கையை மாற்றி தாக்கல்செய்தார். அவர் ஏற்படுத்திய குழப்பத்தால், நாட்டின் கவுரவத்துக்கு, ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா தனிமாநில விவகாரத்தை காங்கிரஸ் தலைமையிலான, மத்திய அரசு, சரியாக கையாள வில்லை. அதனால்தான், தற்போது, தெலுங்கானாவுக்கு எதிராக, ஆந்திராவின் பலஇடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.இந்த இரண்டு விஷயங்களிலும், மத்திய அரசின் குழப்பமான நடவடிக்கையால்தான், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரின், துவக்க அமர்வுகள் பாதிக்கப்பட்டன. என் வாழ்நாளில், பார்லிமென்டில் இது போன்ற குழப்பம் ஏற்பட்டு, நான் பார்த்ததில்லை.என்றார்.

Leave a Reply