பாராளுமன்ற தேர்தல் நாளையே நடத்தப்பட்டாலும் பாஜக ஆட்சியைபிடிக்கும் மத்திய அரசுசார்பில் கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவர்களுக்கு வழங்குவதுபோல் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லையில் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநிலதலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது , ”பாஜக இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவிதொகை வழங்ககேட்டு கடந்த 4 ஆண்டுகளாக போராட்டத்தை நடத்திவருகிறது. ஓட்டு அரசியலுக்காகத்தான் இந்த கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்கிவருகிறது.

கல்வியில் பின்தங்கி இருக்கும் முஸ்லிம் மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்த கல்வி உதவி தொகை வழங்க பரிந்துரைசெய்தது. ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்குவதை விட்டு விட்டு, சோனியாவின் ஆலோசனைப்படி கிறிஸ்தவர்கள், பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனைப்படி சீக்கியர்கள் மற்றும் புத்த, பார்சி மதமக்களும் இதில் சேர்க்கப்பட்டனர். அப்படியானால் இந்து மாணவர்களை மட்டும் ஏன்புறக்கணித்து உள்ளீர்கள்?

இந்திய மக்கள்மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நரேந்திரமோடி ஐதராபாத் நகரில் இருந்து பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் மக்களுக்கு விடியல்வரும். அவரை வருகிற செப்டம்பர் மாதம் தமிழகத்துக்கு வருமாறு கேட்டுள்ளோம். பாராளுமன்ற தேர்தல் நாளையே நடத்தப்பட்டாலும் பாஜக ஆட்சியைபிடிக்கும். மக்கள் தலைவராக எழுந்து நிற்கும் நரேந்திரமோடி தலைமையில் பாஜக மத்தியில் ஆட்சியைபிடிக்கும். என்றார்.

Leave a Reply