பா.ஜ.க ,வின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவரும் குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்கபட்டுள்ளார்.

இங்கிலாந்து எதிர்க் கட்சியின் இந்தியதொழிலாளர் நண்பர்கள்குழு தலைவர் பேரி கார்டினர் எம்.பி. சென்ற வாரம் ஒருகடிதம் அனுப்பியிருந்தார். அதில், ‘நவீன இந்தியாவின் எதிர் காலம்’ என்ற தலைப்பில் பாராளுமன்றத்தில் உரையாற்ற வரும்படி அழைப்புவிடுத்திருந்தார்.

இதேபோல் கன்சர் வேட்டிவ் கட்சியின் இந்திய நண்பர்கள்குழு தலைவர் சைலேஷ் வாரா எம்.பி.யும் தனியாக ஒருகடிதம் அனுப்பியுள்ளார்.

இவ்வாறாக இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளன.

Leave a Reply