பாகிஸ்தான் பிரதமருடனான பேச்சுவார்த்தையை பிரதமர் கைவிடவேண்டும் போர்நிறுத்த உடன்பாட்டை மீறி இந்திய எல்லையில் அத்து மீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவம், இந்தியவீரர்கள் 5 பேரை சுட்டுக்கொன்றது. இதனைதொடர்ந்து எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவிவருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தனதுகருத்தை வலை தளத்தில் பதிவுசெய்துள்ளார். அதில், “எல்லையில் இந்தியவீரர்களை கொன்றதில், பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புக் குழு சம்பந்தப்பட்டிருப்பதை பாதுகாப்புத் துறை மந்திரியும், ராணுவதளபதியும் உறுதிசெய்துள்ளனர். எனவே, பாகிஸ்தான் பிரதமருடனான பேச்சுவார்த்தை நடத்தும் ஆர்வத்தை பிரதமர் மன்மோகன்சிங் கைவிடவேண்டும்” என அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply