காங்கிரஸ்கட்சி ஆளும் மாநிலங்கள் அனைத்திலுமே நிலமோசடியில் சோனியாவின் மருமகன் ராபர்ட்வதேரா கைவரிசை காட்டியிருக்கிறார் என பா.ஜ.க மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கருத்துதெரிவித்துள்ள யஷ்வந்த் சின்ஹா, சோனியா மருமகன் வதேராவின் நிலமோசடி தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த வேண்டும். ராபர்ட் வதேராவை பாதுகாக்க அரசு முயற்சி செய்கிறது . அவர் ஹரியானாவில் மட்டும் நிலமோசடியில் ஈடுபடவில்லை.

காங்கிரஸ்கட்சி ஆளுகின்ற அனைத்து மாநிலங்களிலுமே தமது கைவரிசையை காட்டியிருக்கிறார். இதுபற்றி நாடாளுமன்றத்தில் சிறப்புவிவாதம் நடத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் ராபர்ட்வதேராவின் பெயரை உச்சரித்தாலே போதும்.. அனைத்து காங்கிரஸ் எம்.பிக்களும் எழுந்துநின்று கூச்சல்போட்டு குழப்பத்தை உருவாக்குகின்றனர். அவர் வங்கிவிதிகள், வருமான வரித்துறை உள்ளிட்ட அனைத்தையுமே ஏமாற்றிக்கொண்டு வருவதால் உச்ச நீதிமன்றத்தி கண் காணிப்பிலான சிறப்பு விசாரணை அவசியம் என்றார்.

Leave a Reply