நாகைமாவட்டம் மயிலாடுதுறையில் பா. ஜ.க இளைஞர் அணிசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது;

நாட்டின்வளம் அனைத்தும் அனைவருக்கும் சமமாக சென்றுசேர வேண்டும் என்று நினைத்து செயல்பட்டவர் டாக்டர் அம்பேத்கார். ஆனால் காங்கிரஸ்கட்சியின் செயல்பாடு அவ்விதம் இல்லை. கடந்த 2007ம் ஆண்டு முதல் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சிறுபான்மையின பிரிவு மாணவர்களுக்கு ஓட்டுவங்கியை குறிக்கோளாககொண்டு கல்வி உதவித்தொகை வழங்கிவருகிறது.

நாம் கிறிஸ்துவ, முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு கல்வி உதவித் தொகை வழங்ககூடாது என்று சொல்லவில்லை. ஏழ்மையான இந்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும் என்றுதான் கேட்கிறோம். வருகிறதேர்தலில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிபீடத்தில் அமரவேண்டும் என்று இந்நாடே எதிர்பார்க்கிறது.

மோடி பிரதமர் ஆவது நிச்சயம். அப்போது ஏழை இந்துமாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை கிடைக்கும். வருகிற 25ந் தேதி முதல் 31ந் தேதிவரை மாவட்டம் முழுவதும் பயங்கரவாதத்தை கண்டித்து பா. ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும். வருகிற அக்டோபர், நவம்பர் மாதத்தில் மீனவர்கள் நலன்காக்க கடல்தாமரை போராட்டம் நடைபெறும் என்று அவர் கூறினார்.

Leave a Reply