திக்விஜய் சிங் கீழ்த்தரமான முறையில் அரசியல்செய்கிறார் கீழ்த்தரமான முறையில் அரசியல்செய்யும், காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலர், திக்விஜய் சிங்கின் நடவடிக்கைகள் கண்டனத்திற்கு உரியவை,” என்று , பா.ஜ.க., மூத்த தலைவர்களில் ஒருவரான, ரவிசங்கர்பிரசாத் தெரிவித்துள்ளார்.

உணவுபாதுகாப்பு சட்ட மசோதா குறித்து விவாதிக்க, முதல்வர்கள் மாநாட்டை நடத்தவேண்டும் என, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, நேற்று முன்தினம், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, கடிதம் எழுதியிருந்தார். இதை கிண்டல்செய்து, காங்கிரஸ் பொதுச்செயலர்களில் ஒருவரான, திக்விஜய்சிங் கூறும்போது, ஏழைமக்கள் பயன்பெறும் எல்லா திட்டங்களையும் எதிர்ப்பதன் மூலம், அவர்கள் ஏழைகளுக்கு எதிரானவர்கள் என்பது தெளிவாகிறது. மோடிக்கு, பா.ஜ.க, பார்லிமென்ட் கட்சி உறுப்பினர்கள் மீது நம்பிக்கை இல்லாததால், உணவுப்பாதுகாப்பு மசோதா விவகாரத்தை, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்’ என்று , தெரிவித்திருந்தார்.

இதற்கு, ரவிசங்கர்பிரசாத், கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
பொறுப்பற்றமுறையில் அறிக்கைகள் விடுவதில், திக்விஜய்சிங் கைதேர்ந்தவர் என்பதை, இந்நாடு அறியும். உணவுபாதுகாப்பு சட்டமசோதாவில், செய்யப்படவேண்டிய திருத்தங்கள் குறித்துதான், நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார். பா.ஜ.க, ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், மதக்கலவரங்களை, பா.ஜ.க., தூண்டிவிடுவதாக, திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார். இது, அவரது சொந்தக்கருத்தா அல்லது, காங்கிரஸ் கட்சியின் கருத்தா என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்தவேண்டும். கீழ்த்தரமாக அரசியல்செய்யும், திக்விஜய் சிங்கின் நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியவை. என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Leave a Reply