இந்தியாவில் சாதித்தது என்ன , வளர்ச்சி பணிகள் நடந்தது என்ன என்பதுகுறித்து நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் தயாரா என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சவால் விட்டுள்ளார்.

குஜராத்தில் நடந்த சுதந்திரதின விழாவில் கொடியேற்றி வைத்துவிட்டு மாநில முதல்வரும் , பா.ஜ.க, தேர்தல்பிரசார குழு தலைவருமான மோடி மேலும் பேசியதாவது.

இந்திய திருநாட்டின் பணமதிப்பு குறைந்ததற்கும், நாடு முன்னேற்றம் அடையாமல் இன்னும் பின்தங்கியே இருப்பதற்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசேகாரணம் தற்போதைய வெளியுறவுகொள்கை சரியில்லை , இந்தியாவில் என்ன சாதித்தீர் , வளர்ச்சிப் பணிகள் நடந்தது என்ன என்பது குறித்து நேருக்குநேர் விவாதிக்க பிரதமர் தயாரா என்றார்.

பிரதமரின் சுதந்திரதின உரை திருப்தியாக இல்லை. இவரதுபேச்சில் சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரை மறந்தது ஏன் ? அருகில் உள்ள பாகிஸ்தான் நாட்டுக்கு பிரதமர் கடும்கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. இவரதுபேச்சு ஒரு குறிப்பிட்ட குடும்பநலனில் அக்கறைகொண்டு பேசுவதாகவே உள்ளது. ஒரு குடும்பத்தின் வளர்ச்சியையே பிரதமர் விரும்புகிறார்.

குஜராத்தில் கல்விபெரும் வளர்ச்சிகண்டுள்ளது. இங்கு பள்ளிகள் , கல்லூரிகள் தரம் வாய்ந்தவையாக உள்ளன. ஆனால் மத்திய அரசு கல்வியில் போதியவளர்ச்சியை கொண்டு வரவில்லை. குஜராத்தில் இன்னும் 80 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு விவசாயம் சிறந்துவிளங்குகிறது. மற்ற மாநிலங்களுக்கு குஜராத் முன்னோடியாக திகழ்கிறது. நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளை குஜராத்துக்கு வருமாறு நான் அழைக்கிறேன். இங்குள்ள வேளாண் தொழில் நுட்பங்களை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

பாகிஸ்தானுக்கு கடும்எச்சரிக்கை விடும்படியான பேச்சுக்கள் பிரதமர் உரையில் இல்லை. சீனவிவகாரத்திலும் பிரதமர் பின்வாங்குகிறார். வெளியுறவுகொள்கை ஷரத்துக்கள் சரியில்லை. நாட்டின் பண வீழ்ச்சிக்கு ஆளும் காங்கிரஸ் அரசேகாரணம். ஊழல் விவகாரத்தில் பிரதமர் மவுனம்காக்கிறார். சோனியா குடும்பம் ஊழலில் சிக்கிதவிக்கிறது. உணவுபாதுகாப்பு மசோதா குறித்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. இந்தசட்டத்தில் இன்னும் மாற்றம் கொண்டு வர வேண்டும். நாட்டு மக்களை தவறான பாதைக்கு பிரதமர் அழைத்துசெல்கிறார். என்று மோடி பேசினார்.

Leave a Reply