அடுத்தவர்கள்மீது பழி போடுவதை ஒமர் நிறுத்திக்கொள்ள வேண்டும் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை பாரபட்சமான கண்ணோட்டத்தில் அணுகுவது தான் மாநில மக்களிடையே தனிமைப்படுத்த பட்ட உணர்வை ஏற்படுத்தியுள்ளது’ என ஜம்முகாஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சுதந்திரதின உரையில் கூறியுள்ளதற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறும்போது, “”சுதந்திரதின விழாவில் ஜம்முகாஷ்மீர் முதல்வர் இது போல பேசியிருப்பது துரதிருஷ்ட வசமானது. அடுத்தவர்கள்மீது பழி போடுவதை அவர் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

அரசின் தோல்விகளை மறைப்பதற்காக பா.ஜ.க பெயரை பயன் படுத்துகிறார். பா.ஜ.க மேல் பழிபோட்டு அவரால் தப்பித்துக்கொள்ள முடியாது.

தோல்விகளுக்கு பா.ஜ.க மேல் பழிபோடுவதும், வெற்றிகளுக்கு தாங்களே காரணம் என கூறிக்கொள்வதும் ஆட்சியில் இருப்பவர்களது வழக்கமாகி விட்டது” என ஷாநவாஸ் ஹுûஸன் தெரிவித்தார்.

Leave a Reply