மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைந்தால் பாகிஸ்தானுக்கு உரிய பதிலைக் கொடுப்போம் சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மன்மோகன்சிங் ஆற்றிய உரை முற்றிலும் ஏமாற்றம் தரும் வகையில் உள்ளது” என பாஜக தேசியதலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி அசோகா சாலையில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில் ராஜ்நாத்சிங் கொடியேற்றினார் ,பின்னர் செய்தியாளர்களிடம் ராஜ்நாத்சிங் கூறியது:

பிரதமரின் உரை எங்களை ஈர்க்க வில்லை. பேச்சின் பெரும்பகுதியை கடந்தகால நிகழ்வை மேற்கோள்காட்டி பேசுவதிலேயே அவர் செலவிட்டுள்ளார். எதிர்கால இந்தியாகுறித்து அவர் பேசவில்லை.

பாகிஸ்தானுடனான உறவுகுறித்து பிரதமர்பேசியது தெளிவாக இல்லை. அந்நாட்டுடன் மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் நிலையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் மன்மோகன்சிங்.

இந்திய வீரர்கள்மீது பாகிஸ்தான் படையினர் நடத்தியதாக்குதல் நம் ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாகும். மத்தியில் பா.ஜ.க தலைமையில் ஆட்சியமைந்தால் பாகிஸ்தானுக்கு உரியபதிலைக் கொடுப்போம் என்று ராஜ்நாத்சிங் கூறினார்.

மக்களவை எதிர் கட்சித் தலைவர் சுஷ்மாஸ்வராஜ் கூறுகையில், “நாடு சுதந்திரம் அடைந்தது முதல், ஒவ்வொரு பத்து வருடங்களில் நாடுசந்தித்த வளர்ச்சியை பிரதமர் மன்மோகன் பட்டியலிட்டார்.

ஆனால் லால்பகதூர்சாஸ்திரி, மொரார்ஜிதேசாய், வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களின் தலைமையிலான ஆட்சியின் சாதனைகளை பற்றி பட்டியலிட அவர் மறந்து விட்டார் என்றார்.

Leave a Reply