பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் கற்பிக்க வேண்டும் பாஜக.,வின் வேர்கள் பிரிவின் ஆலோசனைகூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. பாஜக.,வில் நீண்ட காலமாக உறுப்பினர்களாக இருந்து வருபவர்கள், குறிப்பாக 1996க்கு முன்பாக உறுப்பினர்களாக உள்ளவர்களை மதிக்கவும், அவர்களின் ஆலோசனைகளை பெற்று, இளைஞர்களை வழிநடத்து வதற்காகவும் “பாஜக.,வின் வேர்கள் பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளது .

கட்சியின் தேசியசெயற்குழு உறுப்பினர் இல கணேசன் தற்போது மாவட்டங்கள்தோறும் சென்று இந்தபிரிவின் நோக்கம் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். நேற்று நெல்லை, பாளையங் கோட்டை மண்டபம் ஒன்றில் நடந்த நிகழ்வில் வேர்கள்பிரிவின் மாநில தலைவர் வடிவேலு, பொதுச் செயலாளர் பழனிச்சாமி, மாநிலபொறுப்பாளர்கள் பங்கேற்றனர். வரும் பார்லிதேர்தலை பா.ஜ.க சந்திப்பது குறித்தும் அதில் கட்சியின் சீனியர்களின் ஆலோசனைபெற்று செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாமீது தாக்குதல் நடத்திவருகிறது. எனவே பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் கற்பிக்க வேண்டும் என்றார். வேலூர்வெள்ளையப்பன், சேலம் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டோர் கொலைகளில் போலீசாரின் நடவடிக்கையில் திருப்தியுள்ளது என்றார்.

Leave a Reply