நரேந்திரமோடி பிரதமரானால் தாவூத்  இப்ராகிமுக்கு தூக்கு; உத்தவ் தாக்கரே  நரேந்திரமோடி பிரதமரானால், மும்பை நிழல் உலகதாதா, தாவூத் இப்ராகிமை, இந்தியாவுக்கு இழுத்துவந்து, தூக்கில்போடுவார்’ என்று சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

சிவசேனாவின், அதிகாரப் பூர்வ பத்திரிகையான, “சாம்னா’வில், எழுதிய கட்டுரையில் உத்தவ்தாக்கரே தெரிவித்திருப்பதாவது; பிரதமர் மன்மோகன் சிங்கின் சுதந்திரதின உரையை, வரிக்குவரி, விமர்சித்து, குஜராத் முதல்வரும், பாஜக ., மூத்த தலைவருமான, நரேந்திரமோடி, ஆவேசமாக பேசியுள்ளார். அவரின்பேச்சை கேட்கும்போது, அவர், பிரதமரானால், பலஅதிசயங்களை நிகழ்த்துவார் என்று தெரிகிறது.

நரேந்திரமோடி பிரதமரானால், இந்தியாவில் நடந்த பயங்கரவாத சம்பவங்களுக்கு மூளையாக இருந்த , தாவூத் இப்ராகிம், ஹபீஸ்சயீது, டைகர்மேமன் ஆகியோரை, பாகிஸ்தானிலிருந்து, இந்தியாவுக்கு இழுத்துவந்து, தூக்கில்போடுவார். சுவிட்சர்லாந்து வங்கிகளில், இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள கறுப்புபணத்தை எல்லாம், சரக்கு விமானத்தில், இந்தியாவுக்கு ஏற்றிவந்து விடுவார்.

விவசாயிகளின் கடன்களை அடைத்துவிடுவார். தற்போது, வீழ்ச்சி அடைந்துள்ள, இந்திய ரூபாயின் மதிப்பு, மோடிபிரதமரானால், அதிகரித்துவிடும். பாகிஸ்தானிலிருந்து, யாரும், நம் எல்லைக்குள் ஊடுருவமாட்டார்கள். நீர்மூழ்கி கப்பல், தீப்பிடிக்காது. இவை அனைத்தையும், மோடிசெய்வார். இதில், யாருக்கும், எந்தசந்தேகமும் வேண்டாம் இவ்வாறு உத்தவ்தாக்கரே எழுதியுள்ளார்

Leave a Reply