மோடியை ஜாதியின் பெயரால் விமர்சித்த குலாம்நபி ஆசாத் மன்னிப்பு கேட்கவேண்டும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை அவரது ஜாதியின்பெயரால் விமர்சித்த மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் மன்னிப்பு கேட்கவேண்டும் என பாஜக கேட்டுக் கொண்டுள்ளது.

“மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், மோடியை அவமானப்படுத்துவதாக நினைத்து அவரதுஜாதியான “கெங்கு தெலி’யையும் அவமதித்துவிட்டார். இது வருந்தத்தக்கது” என்று பா.ஜ.க.,வின் செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்கூறுகையில், மத்திய அமைச்சர் சல்மான்குர்ஷித்தும் விமர்சனம் என்ற பெயரில் தரக்குறைவான கருத்துகளை தெரிவித்திருக்கிறார். மத்திய அமைச்சர்கள், செய்தித் தொடர்பாளர்களின் பேச்சில் நிதானத்தைகடைப்பிடிக்க காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அறிவுறுத்தவேண்டும் என்றார்.

குலாம்நபி ஆசாத் தான் கூறிய கருத்துகளை உடனடியாக திரும்பப்பெறவேண்டும். மேலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை குறிப்பாக குறிப்பட்ட ஜாதியைச்சேர்ந்தவர்களை அவமானப்படுத்தியதற்காக மன்னிப்புகேட்க வேண்டும் என்றார்.

“குலாம்நபி ஆசாத்தின் இந்தபேச்சு மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை மட்டுமின்றி நாட்டுமக்களையும் அவமதிக்கும்செயல். இதற்காக குலாம்நபி ஆசாத் மற்றும் காங்கிரஸ் மன்னிப்பு கேட்கவேண்டும்’ என்று பாஜகவின் செய்தித்தொடர்பாளர் பிரகாஷ்ஜவடேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜேட்லியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சுதந்திரதின விழாவில் மோடி பேசியதற்கு, ஆசாத் பதில்கூற வேண்டுமானால் இது போன்ற தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதைவிடுத்து ஆணித்தரமான வாதத்தை நாகரிகமான முறையில் எடுத்துரைக்கவேண்டும் என்றார்.

Leave a Reply