சல்மான் குர்ஷித் ஒரு கரப்பான் பூச்சி  குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை தவளை என விமர்சித்த வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை பா.ஜ.க கரப்பான் பூச்சி என தாக்கியுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை தவளை என விமர்சித்திருந்தார். இந்நிலையில் இதற்குபதிலடி கொடுக்கும் வகையில் பாஜக செய்தித்தொடர்பாளர் மீனாக்ஷிலேகி கூறுகையில், குர்ஷித் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்போன்று இல்லை. அவர் வெளிநாட்டவர்களின் அமைச்சர்போன்று பேசுகிறார்.

பாகிஸ்தான் இந்தியாமீது அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதில் ஒரேஒருவர் மட்டும்தான் உயிர் பிழைப்பார். அவர்தான் சல்மான் குர்ஷித். ஏனென்றால் அணு ஆயுத தாக்குதலில் இருந்து கரப்பான் பூச்சிகளால் மட்டும்தான் உயிர்பிழைக்க முடியும். பிறர் விமர்சிக்க எந்தபாஷையை பயன்படுத்து கிறார்களோ அதே பாஷையில்தான் அவர்களுக்கு பதில் அளிக்கவேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு புரிந்து கொள்ளும் சக்தி குறைவு. அதனால் அவர்களுக்கு புரியும்பாஷையில் தான் பேசவேண்டும் என்றார்.

Leave a Reply