மக்களவை தேர்தலை சந்திக்கும்வகையில் பாஜக.,வை அடிப்படையிலிருந்து பலப்படுத்தவேண்டும் என மாநில தலைவர்களை கட்சிமேலிடம் வலியுறுத்தியுள்ளது. பாஜக.,வின் தேர்தல் பிரசாரக்குழு கூட்டம் அதன் தலைவர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில்

நேற்று நடந்தது. இதில் பாஜக . தலைவர் ராஜ்நாத்சிங், அத்வானி, சுஷ்மாசுவராஜ் மற்றும் கட்சியின் மாநில தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் பேட்டியளித்த பாஜக . செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜாவதேகர் கூறுகையில், ‘மக்களவையில் மெஜாரிட்டியை குறிப்பிடும் வகையில் குறிக்கோள் 272+ என்ற கோஷத்தின் அடிப்படையில் வெற்றிபெற வேண்டும் என்று மாநில தலைவர்களை ராஜ்நாத்சிங் கேட்டுக் கொண்டார். விலைவாசி உயர்வு, உள்நாட்டுபாதுகாப்பு, ரூபாய்மதிப்பு குறைவு, ஊழல் உள்ளிட்ட அரசின் தோல்விகளை மக்களிடம் விளக்கவேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர்’ என்றார்.

Leave a Reply