ஜார்கண்ட் மாநில தலை நகர் ராஞ்சியில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரவியூகம் தொடர்பாக பாஜக. தலைவர்களுடன் கலந்துரையாடவந்த பாஜக. மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஐ.மு.,கூட்டணி தலைமையிலான கடந்த 9 1/2 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து அத்தியாவசியபொருட்களின் விலைவாசியும் வரலாறுகாணாத அளவிற்கு பன் மடங்கு அதிகரித்துவிட்டது. குறிப்பாக, வெங்காயம் கிடு கிடு விலையுயர்வு ஏழைமக்களின் விழிகளில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

1998ம் ஆண்டு இதைப் போல வெங்காயத்தின் விலை உயர்வினால்தான் டெல்லி ஆட்சியை பாஜக. இழக்கநேரிட்டது. தற்போதும் உயர்ந்துவரும் வெங்காயத்தின் விலை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான மத்தியஆட்சியை நிச்சயமாக கவிழ்த்துவிடும்.

2014 – பாராளுமன்ற தேர்தலில் மோடி தலைமையில் நாடுதழுவிய அளவில் 100 இடங்களில் தேர்தல்பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply