நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முக்கியக்கோப்புகள் காணாமல் போனது, உ.பி.,மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்துகோருவது, வெங்காயவிலை உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பியதால் மாநிலங்களவை திங்கள் கிழமை நண்பகலுக்குள் இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை அதன் தலைவர் ஹமீதுஅன்சாரி தலைமையில் திங்கள் கிழமை தொடங்கியது. அப்போது மறைந்த மக்களவை உறுப்பினர் திலீப்சிங் ஜுதேவ், சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பலில்பலியான கடற்படை வீரர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீடு விவகாரம்: அதைத்தொடர்ந்து, கேள்விநேரம் தொடங்கிய போது, நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீடு வழக்கில் முக்கிய கோப்புகள் காணாமல் போனதாக கூறப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என்று பாஜக மூத்த உறுப்பினர் வெங்கய்ய நாயுடு கோரினார்.

அவருக்கு ஆதரவாக பகுஜன்சமாஜ் கட்சி, ஐக்கிய ஜனதாதள உறுப்பினர்களும் குரல்கொடுத்தனர்.

இந்நிலையில், நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீட்டால் பயன் அடைந்தவர்கள், தேர்வுக்குழுவினர், அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் பங்குதொடர்பான முக்கிய விசாரணைக்கோப்புகள் காணாமல்போய் உள்ளன.

அவற்றை அரசே அழித்துவிட்டு குற்றமே நடக்காததுபோல பேசுவது சரியல்ல. இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கவேண்டும்’ என்று பிரச்னை எழுப்பினார்.

நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணை அமைச்சர் ராஜீவ்சுக்லா நிலக்கரி விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டதுறை அமைச்சரிடம் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படும்’ என்றார். ஆனால், அவரதுபதிலால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமாதானம் அடையாமல் அமளியில் ஈடுபட்டனர்.

Tags:

Leave a Reply