பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடு என்பதை வெளிப்படுத்த வேண்டும் நமதுநாட்டின் எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவருகிறது. அத்தாக்குதலுக்கு காரணம் பயங்கர வாதிகள் நம் நாட்டிற்குள் நுழைவதற்கே என்பதும் தற்போது தெரியவருகிறது . இருந்தும் நமது மத்தியஅரசு மவுனம்சாதிக்கிறது.

இது நாட்டுமக்களை கவலைகொள்ள செய்துள்ளது. துண்டாவின் சாட்சியைகொண்டு உலக அரங்கில் பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவுநாடு என்பதை வெளிப்படுத்தவேண்டும். நமது எல்லைபகுதியில் பாகிஸ்தான் நடத்தும் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்கவேண்டும்.

தற்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மத்தியஅரசு துணிச்சலோடு செயல்பட்டு பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிக்கவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. என்று இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்:-

Leave a Reply