அமெரிக்கடாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்துவந்தாலும் மத்திய அரசு எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி புகார் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம்பேசிய நரேந்திர மோடி, மத்திய அரசு பொருளாதார சரிவு குறித்தோ , இந்திய ரூபாயின் வீழ்ச்சிகுறித்தோ கவலைப்படாமல் பதவியை தக்கவைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருப்பது குறித்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துவருகிறது. அதனை சரிசெய்ய மத்திய அரசு இது வரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றார் மோடி.

Leave a Reply