சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங், அரசின் அதிகார பூர்வ தியாகிபட்டியலில் இடம்பெற வேண்டும் என மாநிலங்களவையில் எம்பி.க்கள் வலியுறுத்தினர்.

மாநிலங்களவையில் திங்கள் கிழமை கேள்விநேரத்தின் போது ஐக்கிய ஜனதா தள எம்.பி. கே.சி. தியாகி எழுந்து, சுதந்திரப்போராட்ட வீரர் பகத்சிங் அரசின் அதிகார பூர்வ தியாகி பட்டியலில் இடம்பெறவில்லை என்று சுட்டிக் காட்டினார்.

இதேபோன்று மற்றொரு சுதந்திரப்போராட்ட வீரர் ராஜ்நாராயண் பெயரும் அரசின் பட்டியலில் இடம்பெறவில்லை. இது குறித்து அவரது மகன் பல முறை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசென்றும் பயனில்லை என குறிப்பிட்டார்.

பா.ஜ.க.,வின் மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு, பகத்சிங்கின் பெயரை அரசு பட்டியலில் இடம்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதேகருத்தை எஸ்.சி. மிஸ்ரா (பகுஜன்சமாஜ்), சிவானந்த் திவாரி (ஐக்கிய ஜனதாதளம்) ஆகியோரும் வலியுறுத்தினர்.

Leave a Reply