வெங்காயத்தை வாங்கும் போதே கண்ணீர் வருகிறது ரக்ஷா பந்தனையொட்டி ஆண்களுக்கு பெண்கள் ராக்கி கட்டி விடுவது வழக்கம். அப்படி ராக்கிகட்டும் பெண்களுக்கு பா.ஜ.க.,வோ அன்பளிப்பாக வெங்காயத்தைவழங்கி பரபரப்பை கிழப்பியுள்ளது.

வெங்காயத்தின் விலை ரூ80ஐ தாண்டி ரூ100ஐ நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பா.ஜ.க தலைமையில் நேற்று ராக்கிகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். பா.ஜ.க.,வின் மூத்த தலைவர்களான வெங்கையாநாயுடு, பண்டாரு தத்தாத்ரேயா, மாநில பா.ஜ.க தலைவர் கிஷண்ரெட்டி உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ராக்கிகட்ட கலந்துகொண்ட பெண்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு வெங்காயங்கள் வழங்கப்பட்டன. இதுதொடர்பாக கருத்துதெரிவித்த வெங்கையா நாயுடு, முன்பெல்லாம் வெங்காயத்தை நறுக்கும் போதுதான் கண்ணீர்வரும். இப்போது வெங்காயத்தை வாங்கும் போதே கண்ணீர்வருகிறது. இது ஆளும் ஐ.மு., கூட்டணி அரசின் தோல்வியையே காட்டுகிறது என்றார்.

Leave a Reply