இந்தியா நூற்றுக்கணக்கான மதங்களையும்– கொள்கைகளையும், ஆயிரக்கணக்கான சித்தாந்தங்களையும் ஏற்றுக்கொண்ட நாடு,,,.

இந்தியாவுக்குள் புகுந்த பார்சிகளுக்கு குஜராத் மன்னர்கள் ஒரு ஊரையே தானமாக தந்தானாம்.".நாங்களும் பாலில் கலந்த சர்க்கரை போல உங்களோடு பின்னிப்பிணைந்து சகோதரர்களக இருப்போம்"– என்று அவர்களும் சொன்னார்களாம்..

அவர்களில் இந்திய ராணுவ ஜென்ரல் ஃபீல்டு மார்ஷல் மானேக்‌ஷா, வழக்குரைஞர்கள்..நாரிமன்…சோலிசோரப்ஜி போன்றோரை நாமும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றோம்..

இந்தியாவின் ஜனாதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், ராணுவ ஜென்ரல்கள், மற்றும் மாநில கவர்னர்கள், என்ற பெரும் பதவிகளை மைனாரிட்டிகளுக்கு கொடுத்து நாமும் மதமாச்சரியங்கள் இல்லாதவர்கள் என்பதை உணர்த்தினோம்.உலகின் பெரும்பாலான நாடுகள் "மதத்தின் பெயரில்" ஆட்சி நடத்தும்போது, 5 இல் 4 பங்கு இந்துக்கள் வாழும் நம்நாடு, தன்னை "மதசார்பற்ற நாடு " என அறிவித்து மதநல்லிணக்கத்தை பறை சாற்றியது.,

ஆக கருத்தோ, கொள்கையோ, சித்தாந்தமோ, மதமோ, எதுவாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்வது, அல்லது அதோடு ஒத்துப்போவது, அல்லது "உன் கொள்கை உனக்கு…என் மதம் எனக்கு" என்றபடி, "விட்டுக்கொடுக்கும் மனோபாவம்" இந்நாட்டின் பிரதான அம்சமாக இருந்து வந்துள்ளது..

ஆனால் சமீப்காலமாக் குறிப்பாக கடந்த 20 வருடமாக "டாலரன்ஸ்"–என்னும் சகிப்புத்தன்மை  குறைந்து வருகிரது..என் மதம் ..என் கொள்கை..என் சித்தாந்தமே " உயர்ந்தது..என்னும் போக்கு மேலோங்கி வருகிறது..இது அவரவர் உரிமை என வரவேற்றாலும்,மாற்று மதம், கொள்கை—சித்தாந்தம் கொண்டவர்கள் "இருக்கவே கூடது" என்னும் போக்கு அதிகரித்து வருவது வருந்தத்தக்கது..

இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள்.கல்லையும், மண்ணையும் காற்றையும் பஞ்சபூதங்களையும் நாம் வணங்குகிறோம்.இந்து மதத்தில் நாத்தீகர்களும், கடவுள் மறுப்பாளர்களும், இருக்கிறார்கள்.பிள்ளையார் சிலையை உடைத்து, ராமனை செருப்பால் அடித்ததவர்களை கூட இந்துமதம் ஒன்றும் செய்யவில்லை.

ஆனால் சிலமதங்களின் "ஒரே கடவுள், அது எங்களுடையதே..மற்றவர்கள் பாவிகள்—துரோகிகள்" என்னும் .. மதநெறி…—மதவெறியாகி, நாம் போற்றிப்பாதுகாத்து வரும் மத நல்லிணக்கத்தை தவிடு பொடியாக்குகிறது.

இம்மதங்கள் வழிபாட்டுத்தலங்களிலும், "மதக்கல்விச்சாலைகளிலும், "இளைஞர்களுக்கு மதநெறி என்னும் பெயரில் மதவெறியூட்டி" நாம் கட்டிக்காத்து வரும் "சகிப்புத்தன்மைக்கு" ஊறு விளைவித்து வருகிறார்கள்.

மதநெறிக்கல்வி என்ற பெயரில், இவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வி, வேலை வாய்ப்புக்களுக்கு பிரயோஜனம் இல்லாததால் இந்த இளைஞர்கள், பொருளீட்ட சட்டத்திற்கு புறம்பான வழிகளை நாடுகிறார்கள்..பல நேரங்களில் தேசவிரோதிகளோடு ஐக்கியமாகிறார்கள்.

நான் அகில இந்தியாவைப்பற்றி எழுதப்போவதில்லை..தமிழகத்தில் சமீபகாலமாக நடைபெற்று வரும் வன்முறைக்கு குறிப்பாக மதவன்முறைக்கு யார் காரணம்?—என்ன காரணம்??

"நீதான்..காரணம்..இல்லை.—.இல்லை..நீதான் நிச்சயமான காரணம்..நன் கரணமில்லை.. " என்ற குற்றச்சாட்டுக்கள் அள்ளி வீசப்பட்டுக்கொண்டிருந்தாலும் நிஜக்காரணம் யார்?.

ஒருவர் ஒரு கருத்தை சொல்கிறார்.. அது மற்றவருக்கு ஏற்புடையது அல்ல..உடனே அவர் தன் பலத்தை வைத்து கருத்து சொன்னவரை நைய்ய புடைக்கிறார்..அல்லது கொலை செய்து "எதிர் கருத்து சொன்னால் ஜாக்கிரதை உங்களுக்கும் இதான் முடிவு" என பயத்தை விதைக்கிறார்.

தன் கருத்துக்கு மாற்றுக்கருத்து திரைப்படங்களில் வந்தால் கூட சட்டத்தை கைய்யிலெடுத்து சமூகத்தை ஸ்தம்பிக்க வைக்கிறார்..

ஜனநாயக நாட்டில் மாற்றுக்கருத்துக்கள் மறைந்து போக வேண்டுமா?..இருக்கவேகூடாதா? ஏக இறைவன்…ஏக கருத்து என்பதே உலகம் முழுதும் பரவி, மற்றவர்கள் மடிந்து போக வேண்டுமா?

நாம் எங்கே போகிறோம்? கற்காலத்துக்கா?—அல்லது கற்களை கொண்டு வீடுகட்டி செவ்வாய் கிரகத்தில் குடியேறும் காலத்தை நோக்கியா?

எல்லா கொள்கைகளையும் லட்சியங்களையும் மறந்துவிட்டு எல்லோரும் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்..யதார்த்தநிலைக்கு வாருங்கள்..

மார்க்ஸீயமும் இருக்கட்டும், இந்துத்வாவும் இருக்கட்டும்—ஏசுவும் இருக்கட்டும் அல்லாவும் இருக்கட்டும், –வீரமணியும் இருக்கட்டும் ராமகோபாலனும் இருக்கட்டு்ம்.

இந்நாடு பல்வேறு வண்ணங்கள்,– வாசனைகள், கொண்ட பூக்கள் பூத்துக்குலுங்கும் நந்தவனம்..இது எண்ணெய்க்காக பயிரிடப்பட்ட சூரியகாந்திப்பூ வயலல்ல..

மாற்று சித்தாந்தக்காரர்களை சினிமாவில் வருவதைப்போல நொடிப்பொழுதில் வெட்டி சாய்த்து இந்நாட்டில் காலம் காலமாக காத்துவரும் "சகிப்புத்தன்மையை" சாகடிக்காதீர்கள்..

"சகிப்புத்தன்மைதான்" இந்நாட்டின் ஆன்மா…ஆணிவேர்…அதற்கே ஆபத்துவந்தால்—–ஆபத்தை உண்டாக்கியவர்கள்…அழிந்து போவார்கள்..இது சாபமல்ல…சரித்திரம் சொன்ன பாடம்—–..பாடம் கற்கவேண்டுமென்பவர்கள்…ஆடட்டும்…

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Tags:

Leave a Reply