ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்ககோரி பாஜக இளைஞர் அணிசார்பில் கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டல்முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக அகில இந்திய இளைஞர் அணி தேசியதலைவர் அனுராக்தீன் தாகூர் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

ஏழை இந்து மாணவர்கள் கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் புறக்கணிக்கப் படுகிறார்கள். காங்கிரஸ் கட்சிதான் இந்தசெயலை தொடர்ந்து செய்துவருகிறது. தமிழகத்தில் பாஜக.,வுக்கு செல்வாக்கு 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது நாடெங்கும் நரேந்திர மோடி அலைவீசுகிறது.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். மோடிதான் பிரதமர். அவர் பிரதமராவதை எந்தசக்தியாலும் தடுக்கமுடியாது. அவர் பிரதமரானதும் முதலில்போடும் கையெழுத்து இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு உரியதாகத்தான் இருக்கும். தமிழகத்தில் பாஜக முன்னிலை கட்சியாக உருவாகிவருகிறது. என்று பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.

Leave a Reply