ராமர்கோயில் கட்ட வேண்டும் என்பது அரசியல்பிரச்சனை அல்ல அயோத்தியில் ராமர்கோயில் கட்ட வேண்டும் என்பது அரசியல்பிரச்சனை அல்ல, கலாச்சாரம் தொடர்பான விஷயம். எனவே, ரதயாத்திரைக்கு உபி அரசு தடை விதித்து இருக்கத் தேவையில்லை என பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

அயோத்தியில் ராமர்கோயில் கட்டவேண்டும் என்று, விசுவ ஹிந்துபரிஷத் அமைப்பினர், ரதயாத்திரை மேற்கொள்ளப்போவதாக அறிவித்து இருந்தனர். இதற்கு உபி அரசு தடைவிதித்து இருந்தது.

தடையை மீறி ரதயாத்திரை நடைபெற்றதால், அசம்பாவிதம் ஏதும்நடக்காமல் இருக்க, ரதயாத்திரையில் ஈடுபட்ட விசுவஹிந்து பரிஷத் அமைப்பினர், மற்றும் அதன் தலைவர்கள் உள்ளிட்டவர்களை உபி அரசு கைதுசெய்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங், ”ராமர்கோயில் கட்டுவது ஒன்றும் அரசியல்பிரச்சனை அல்ல, இது ஒரு கலாச்சாரம்தொடர்பான விஷயம். இதற்கு தொடர்புடைய ரதயாத்திரை என்பதற்கு உத்திரப்பிரதேச அரசு தடைவிதித்து இருக்ககூடாது. அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது என்பதை பாஜக நிறைவேற்றியேத் தீரும். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.” என்று ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

Leave a Reply