அதிமுக,  திமுக  இரு கட்சிகளையும் பா.ஜ.க , எதிர்க்கிறது காங்கிரஸ் பொதுசெயலர் ராகுல் காந்தி தேமுதிக., தலைவர் விஜய காந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியதன் மூலம், தேமுதிக., வை, காங்கிரஸ்பக்கம் இழுக்க முயற்சிக்கிறார் என்று பாஜக , தேசிய செயற்குழு உறுப்பினர் இல கணேசன் தெரிவித்துள்ளார் .

“அனைத்து மத மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நீலகிரிமாவட்ட பா.ஜ.க இளைஞரணி சார்பில், ஊட்டியில் போராட்டம்நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ., தேசிய செயற் குழு உறுப்பினர் இல.கணேசன், நிருபர்களிடம் தெரிவித்ததாவது: “மதவாதசக்திகள், ஆட்சி அமைக்ககூடாது’ என, பிரதமர் மன்மோகன்சிங் கூறிவருகிறார். கிறிஸ்துவ, இஸ்லாமிய சமுதாய மாணவ, மாணவியருக்கு மட்டும் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதன் மூலம், காங்கிரஸ் அரசு மதரீதியான பிரிவினையை தூண்டிவருகிறது. இந்து மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும். லோக்சபா தேர்தலுக்குப்பின், பா.ஜ.க, தலைமையிலான ஆட்சி அமைந்தால், அனைத்துசமுதாய மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வரும்தேர்தலில், நரேந்திரமோடி பிரதமராகி, நாட்டை அச்சுறுத்தி கொண்டிருக்கும் தேசவிரோத சக்திகளை முறியடிப்பார்.

ஆங்காங்கே நடக்கும் குண்டுவெடிப்பு, கொலைபோன்ற சம்பவங்களை அரசியலாக்கி, மக்களின் செல்வாக்கைபெற, காங்கிரஸ் உட்பட சிலகட்சிகள் முயற்சிக்கின்றன. பா.ஜ.க., பிணத்தைவைத்து அரசியல் நடத்தும் கட்சியல்ல. வரும் லோக்சபாதேர்தலை சந்திக்க, நாடுமுழுவதும் பூத்கமிட்டிகள் முழுவீச்சில் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கூட்டணிகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. அதிமுக.,- திமுக., என இரு கட்சிகளையும் பா.ஜ.க , எதிர்க்கிறது; அதேகொள்கையை தேமுதிக.,வும் கொண்டுள்ளதால், அக்கட்சியின் கூட்டணியை வரவேற்கிறோம். காங்., பொதுசெயலர் ராகுல், தேமுதிக., தலைவர் விஜய காந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியதன் மூலம், தேமுதிக., வை, காங்கிரஸ்பக்கம் இழுக்க முயற்சிக்கிறார் என்று இல. கணேசன் தெரிவித்தார்.

Leave a Reply