உணவுபாதுகாப்பு மசோதா மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் . பேசிய பாஜக மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி, உணவுபாதுகாப்பு மசோதா தேர்தலுக்கான மசோதா என்று விமர்சனம்செய்தார். உணவு பாதுகாப்பு மசோதாவை 2009ஆம் ஆண்டே நிறைவேற்றுவோம் என்று

உறுதி அளித்த ஐக்கிய கூட்டணி அரசு, தற்போது தேர்தல்நெருங்கும் நேரத்தில் மசோதாவை நிறைவேற்ற முயற்சிசெய்வது ஏன் என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்துபேசிய அவர், இந்த நான்கரை ஆண்டு காலம் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். ‘இது உணவுபாதுகாப்பு மசோதா அல்ல. வாக்காளர்களை கவருவதற்கான பாதுகாப்புமசோதா. இது தேர்தலுக்கான மசோதா’ என்றும் அவர் விமர்சனம்செய்தார்.

Leave a Reply