ரூபாய் மதிப்பு தொடர் சரிவுக்கு  இந்த அரசுதான் பொறுப்பு ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்துவருவதற்கு இந்த அரசுதான் பொறுப்பு எனவும், சாதாரண மக்களுக்கு இந்த அரசு ‌பெரியதுரோகம் இழைத்து விட்டதாகவும், ஐக்கி‌ய முற்போக்கு கூட்டணி அரசுமீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்றும் பாஜக.,வை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் லோக் சபாவில் ஆவேசமாகபேசினார்.

பார்லி. மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே நேற்று உணவுபாதுகாப்பு மசோதா , குரல் ஓட்டெடுப்புமூலம் நிறைவேறியது. இதற்கு முன்னர் பல்வேறு பிரச்னைகளால் இரு அவைகளும் அமளி, கூச்சல்குழப்பம் ஆகியவற்றால் ஒத்தி வைக்கப்பட்டே முடங்கிப் போயின. இன்று நடந்த கூட்டத்தொடரில் சற்றுவிவாதம் நடந்தது.

இன்று காலைமுதலே அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. மதியநேரத்தின் போது ரூபாய் மதிப்பு ரூ. 66 ஆக சரிந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் லோக்சபாவில் கடும்விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து பா.ஜ.க முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த்சின்கா ‌பேசியதாவது, தற்போதைய பொருளாதார சரிவுக்கும், ரூபாய்மதிப்பு வீழ்ச்சிக்கும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் பொறுப்பு . இந்த அரசுமீது முதலீட்டாளர்கள் முற்றிலும் நம்பிக்கையை இழந்து விட்டனர்.

பொருளாதார விஷசூழலில் சிக்கி : சாதாரண மக்களுக்கு இந்த அரசு துரோகம் இழைத்து விட்டது. விலைவாசி உயர்வு, வட்டிவிகித உயர்வால் நாடு கடும் பொருளாதார விஷசூழலில் சிக்கி சென்று‌கொண்டிருக்கிறது. 1995-ம் ஆண்டு நடப்புகணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதமாக இருந்தது. தற்போது இது 5 சதவீதத்தினை தொட்டு விட்டது. வரப்போகும் 2014-ம் ஆண்டுதேர்தலில் எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்பதிலேயே அரசு குறியாக உள்ளது. இதில் நாட்டின் பொருளாதாரத்தை பற்றி சிறிதும்கவலை அடைவதாக தெரியவில்லை. மீண்டும் நெருக்கடியான 2009 ஆண்டு வருமோ என்ற அச்சம்நிலவுகிறது
என்று சி்ன்கா பேசினார்.

Leave a Reply